Thursday, January 23, 2025

யஷ்-ன் ‘டாக்ஸிக்’ படப்பிடிப்புக்கு வந்த சிக்கல்… பறந்த அரசு நோட்டீஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கே.ஜி.எப் படத்தின் இரு பாகங்களிலும் நடித்த பிரபல கன்னட நடிகர் யஷ், தற்போது மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கும் ‘டாக்ஸிக்’ என்ற புதிய படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, ஹுமா குரோஷி, மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள அழகிய வனப்பகுதியில் நடைபெற்று வந்தது. எனினும், அங்கு படப்பிடிப்பு மேற்கொள்ளும் இடத்திற்கான இடையூறுகளை சமாளிக்க படக்குழுவினர் பல மரங்களை வெட்டி அகற்றியதாக கூறப்படுகிறது.

இந்த விவரங்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்ததும், அவர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர், கர்நாடக அரசின் சார்பில் ‘டாக்ஸிக்’ பட நிறுவனம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, தற்போதைய நிலவரப்படி, ‘டாக்ஸிக்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News