வாழ்க்கையை பிரதிபலிக்கும் எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் ராம். இவர் இயக்கிய ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’, ‘தரமணி’ போன்ற படங்கள் வெற்றிகரமாக வெளிவந்து விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மனதிலும் இடம் பெற்றன. தற்போது இவர் ‘பறந்து போ’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடித்துள்ளார். அவருடன் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார் மற்றும் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார்.
படத்தின் கதை, ஒரு பிடிவாதமான பள்ளி சிறுவன் மற்றும் பணத்தின் மீது அதிகக் கவனம் செலுத்தும் அவனது தந்தை நகர வாழ்க்கையை விட்டு விலகி மேற்கொள்ளும் ஒரு பயணத்தை மையமாகக் கொண்ட ‘ரோட் டிராமா’ ஆக அமைந்துள்ளது. இத்திரைப்படம் ஜூலை மாதம் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ‘பறந்து போ’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.