Touring Talkies
100% Cinema

Thursday, June 12, 2025

Touring Talkies

அதர்வா நடித்துள்ள DNA படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி நடித்துள்ள திரைப்படம் ‘டி.என்.ஏ’. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், இதற்கு முன்பு ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘பர்ஹானா’ போன்ற படங்களை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

‘டி.என்.ஏ’ படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘சித்தா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நிமிஷா சஜயன் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் ஆக்‌ஷன் மற்றும் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இப்படத்தின் சிறப்பு அம்சமாக, இதில் இடம்பெறும் ஐந்து பாடல்களும் ஐந்து வெவ்வேறு இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘டி.என்.ஏ’ திரைப்படம், வரும் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News