நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த கே.ஜி.எப் 1 மற்றும் கே.ஜி.எப் 2 படங்களின் மூலம் இந்திய அளவில் பெரிய புகழைப் பெற்றார். இந்த திரைப்படங்கள் வெளியானதும் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து, பெரும் வசூலையும் திரட்டின. அதன் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
டாக்சிக் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தைக் கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.
இன்று நடிகர் யாஷ் தனது 39-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, டாக்சிக் படக்குழு ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மேலுமாக, நடிகர் யாஷ் தற்போது ராமாயணம் திரைப்படத்தில் ராவணனாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.