Tuesday, January 21, 2025

டோவினோ தாமஸ் பிறந்தநாளையொட்டி எம்புரான் படத்தில் அவரின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு! #L2E

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ திரைப்படம் 2019-ஆம் ஆண்டில் வெளியானது. மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல், மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்த இப்படம், தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடித்த இதை, இயக்குநர் மோகன்ராஜா இயக்கினார்.

‘லூசிஃபர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று பிருத்விராஜ் அறிவித்தார். இரண்டாம் பாகத்துக்கு ‘எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இந்தப் படத்தில் இயக்குநராக மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

சமீபத்தில், பிருத்விராஜின் பிறந்த நாளையொட்டி அவரது கதாபாத்திர போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில், அவர் ராணுவ ஜெனரலாக நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், படம் வரும் மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், நடிகர் டோவினோ தாமஸ் இன்று தனது 36-வது பிறந்த நாளைக் கொண்டாடிவரும் தருவாயில், ‘எம்புரான்’ படத்தில் அவரது கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. போஸ்டரில், வெள்ளை நிற குர்தா-பைஜாமாவில் அமைதியாக நிற்கும் டோவினோ தாமஸின் கதாபாத்திரம் ஜதின் ராம்தாஸ் என அறிமுகமாகிறது. சுவரில் பி.கே. ராம்தாஸின் பிரமாண்டமான உருவப்படம் பொருத்தப்பட்டுள்ளது. இது, இரு கதாபாத்திரங்களுக்கும் இடையிலான சுவாரஸ்யமான கதை தொடர்பைக் காட்டுகிறது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News