சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தை புதுமுக இயக்குநராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம். எஸ். பாஸ்கர், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.அதேநேரத்தில், இன்று சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ திரைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தை இயக்கிய அபிஷன் ஜீவின்ந்த், ‘ரெட்ரோ’ திரைப்படத்தை பார்த்த பின்னர் தனது பாராட்டுகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர், “ரெட்ரோ திரைப்படத்தை பார்த்தேன். இது ஒரு அற்புதமான படைப்பு, கார்த்திக் சுப்பராஜ் சார். சூர்யா சார், நீங்கள் எளிதில் திரையை முழுமையாக கட்டிப்பிடித்து விட்டீர்கள், ஒவ்வொரு காட்சியிலும் உங்கள் மாயாஜாலம் வெளிப்படுகிறது. சந்தோஷ் நாராயணனின் இசை இன்னும் சிறப்பாக இருந்தது. ‘ரெட்ரோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள்!” என பதிவிட்டுள்ளார்.
ரெட்ரோ படத்தை பார்த்துவிட்டு மெய்மறந்து பாராட்டிய டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவின்ந்த்!

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more