சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, சிறந்த வசூலையும் பெற்றது. அறிமுக இயக்குநரான அபிஷன் ஜீவின்ந்த் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தை பார்த்து பல பிரபலங்களும் அவரை பாராட்டியிருந்தனர்.

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அபிஷன் ஜீவின்ந்த், அடுத்த படத்தில் எந்த நடிகரை வைத்து இயக்கப்போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் உருவாகியிருந்த நிலையில், அவரே கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அபிஷன் கதாநாயகனாக நடிக்கவுள்ள இந்தப் படத்தை, ‘டூரிஸ்ட் பேமிலி’யில் இணை இயக்குநராக பணியாற்றியவர் இயக்கவுள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘கரெக்டட் மச்சி’ என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.