தெலுங்கு சினிமாவில் 25 ஆண்டுகளாக நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் வெங்கட்ராஜ் என்கிற பிஷ் வெங்கட். தெலுங்கானா பகுதியை சேர்ந்த கடற்கரையோர கிராமங்களில் மீனவர்கள் பேசும் பாஷையில் இவர் வசனம் பேசுவதால் இவருக்கு திரையுலகில் பிஷ் வெங்கட் என்கிற பெயரே நிலைத்து விட்டது. கபார் சிங், டிஜே தில்லு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரது மறைவுக்கு தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
