தெலுங்கு திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக விளங்கும் பரியா அப்துல்லா, 2021 ஆம் ஆண்டு வெளியான ‘‘ஜாதி ரத்னலு’’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிய அவர், ‘‘ராவணசுரா’’ மற்றும் ‘‘லைக், ஷேர் & சப்ஸ்கிரைப்’’ போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றார்.

தற்போது பரியா, ‘‘எதோட்டிசெய் குர்ராம்பா பிரெட்டி’’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை முரளி மனோகர் ரெட்டி எழுதி இயக்கியுள்ளார். மேலும், தமிழில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ‘வள்ளி மயில்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
திரைப்படங்களுடன் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பரியா மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்த நீச்சல் உடை அணிந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.


 
