Thursday, October 10, 2024

பான் இந்தியா படங்கள் என்றாலே டைட்டில் ஒரு மிகப்பெரிய பிரச்சினை… தயாரிப்பாளர் தில் ராஜூ OPEN TALK! #GAME CHANGER

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தெலுங்கில் உருவாகி வரும் படம் ‛கேம் சேஞ்சர்’. மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ‛இந்தியன் 2’ படம் அவருக்கு சாதகமாக அமைக்காத சூழலில், இந்த ‛கேம் சேஞ்சர்’ படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், மிகுந்த கவனத்துடன் படத்தை செதுக்கி வருகின்றார் ஷங்கர். மேலும், இந்த படத்தை தயாரிப்பது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ. இந்த படம் இந்த வருடம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ, குறிப்பாக, பான் இந்தியா ரிலீஸாக வெளிவரும் படங்களின் வெற்றிக்கு மற்றும் வியாபாரத்திற்கு, எல்லா மொழிகளிலும் ஒரே தலைப்பில் படம் வெளியாகினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், மற்ற மொழிகளிலும் இதே தலைப்பை பெற கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில், ஒரு மொழியில், இந்த படத்தின் தலைப்பை ஏற்கனவே வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்திருந்தது குறித்து அறிந்ததும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த தலைப்பை பெற்றுக் கொண்டதாக தில் ராஜு தெரிவித்துள்ளார். மற்ற மொழிகளிலும் இதுபோன்ற தலைப்பு தொடர்பான பிரச்சனைகள் இல்லாமல் முடிவுக்கு வந்தவுடன், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News