லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இப்படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, சவுபின் சாகிர் மற்றும் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜின் ஓரிரு படங்களில் முக்கியமான பெண் கதாபாத்திரங்கள் கொலை செய்யப்படுவது போல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். எனவே இப்படத்திலும் பிரீத்தி என்ற ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரமும் கொலை செய்யப்படுமா என ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஸ்ருதிஹாசன் அளித்த ஒரு பேட்டியில், ‘கூலி’படத்தில் நான் நடிக்கிறேன் என அறிவிப்பு வெளியானபோது என் கதாபாத்திரம் கொலை செய்யப்பட்டுவிடுமா? நான் சண்டை காட்சிகள் நடிப்பேனா என்றெல்லாம் விவாதிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் இந்த படத்தில் எனக்கு சண்டைக் காட்சிகள் இல்லை. நான் சத்யராஜ் மகளாக பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தின் கதையை கேட்டதுமே பல பெண்களின் கதாபாத்திரங்களோடு என்னால் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிந்தது என தெரிவித்துள்ளார்.