நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ‘உப்பு கப்புரம்பு’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இப்படம், நகைச்சுவை சார்ந்ததொரு கதை ஆகும். இப்படம் வெளியானது முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தனது கதாப்பாத்திரத்தில் இயல்பாக சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் கதாநாயகனாக சுகாஸ் நடித்துள்ளார்.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் அளித்த ஒரு பேட்டியில், “நான் மனஉளைச்சலுடன் இருந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, ‘நான் அப்செட் ஆகிவிட்டால் நல்லா சாப்பிடுவேன். பிறகு காரை எடுத்துக்கொண்டு தனியாக டிரைவ் போவேன். அப்போது மனதுக்கு அமைதியாக இசையை கேட்பேன். மேலும், வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டியின் முகத்தைப் பார்த்தாலே எனக்கு தெளிவும் நிம்மதியும் கிடைக்கும்’ என தெரிவித்துள்ளார்.