மலையாள நடிகை சம்யுக்தா தமிழில் களரி படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர் தனுஷ் நடித்த வாத்தி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமானார். தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் மற்றும் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்திருந்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “எனக்கு மதுப் பழக்கம் உள்ளது. ஆனால் தினமும் குடிப்பதில்லை. அதிகமான மன அழுத்தம் அல்லது பதட்டம் ஏற்படும் சமயங்களில் மட்டுமே மது அருந்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக நடிகர்கள், நடிகைகள் மது அருந்தும் பழக்கம் இருந்தாலும் தங்களது இமேஜ் பாதிக்கப்படும் என்பதால் அதை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைக்க முயற்சிப்பார்கள். ஆனால் சம்யுக்தா இவ்வாறு திறந்த மனதுடன் பகிர்ந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.