தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடித்திருக்கும் படம் ‘குட் பேட் அக்லி’. ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ள இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
இந்தப் படத்தைப் பற்றி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது, “குட் பேட் அக்லி’ ஒரு ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல, உணர்ச்சிகரமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்தக் கதையின் மையக்கரு என்னவென்றால், இந்த உலகம் நம்மை நல்லவராக பார்த்தால், நாமும் நல்லவராகவே இருப்போம். ஆனால், நாம் கெட்டவராக பார்க்கப்பட்டால், அதைவிடவும் கெட்டவராக, அக்லியாக (Ugly) மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும்” என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த கதாபாத்திரத்தில் அஜித் குமாரை திரையில் எப்படி காண விரும்பினேனோ, அதைவிட அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்” என்று ஆதிக் ரவிச்சந்திரன் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.அதோடு, இந்தப் படத்தில் அஜித் குமாரின் மகனாக, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா தேவ் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே, அஜித் நடித்த ‘வரலாறு’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதைத் தவிர, ‘சலார்’ திரைப்படத்தில், பிரித்விராஜின் சிறுவயது கதாபாத்திரமாகவும் நடித்த அனுபவம் பெற்றுள்ளார்.