நடிகை ராஷ்மிகா மந்தனா, தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை அளித்து, தற்பொழுது முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சிக்கந்தர்’ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, நடிகர் தனுஷுடன் ஜோடியாக ‘குபேரா’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், தெலுங்கானா அரசை விமர்சிக்கின்ற வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில், 400 ஏக்கர் காட்டு நிலத்தை அழித்து, அந்த இடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (IT Park) அமைக்குமாறு அந்நாட்டின் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த முடிவை மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, நடிகை ராஷ்மிகா மந்தனாவும், அரசின் இந்த முடிவை எதிர்த்து தனது தெளிவான கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், இந்த செய்தியை பார்த்ததும் மனது மிகுந்த வருத்தத்திற்குள்ளாகியது என்றும், இது மிகவும் தவறான முடிவாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.