தூள் திரைப்படத்தின் `மதுர வீரன் தானே’ பாடலை விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான வீர தீர சூரன் படத்தின் க்ளைமேக்ஸில் இணைத்திருந்தது பார்வையாளர்களை குதூகலப்படுத்தியது.
இந்த பாடலை இணைத்ததற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளனர் எஸ்.யூ. அருண்குமார், `அந்தப் பாடலை வைக்க வேண்டும் எனக் கதையை எழுதும்போதே முடிவு செய்துவிட்டேன். ஆனால் படம் முழுவதும் திருவிழாவிலிருந்து பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்.அது போலவே இந்தப் பாடலையும் ரேடியோ குழாயிலிருந்து ஒலிக்க வைக்க வேண்டும் என்றுதான் திட்டமிட்டோம்.
ஆனால் , இந்தக் காட்சிக்கு முந்தைய காட்சியில் பாடல்கள் ஒலிப்பது சூழலுக்குச் சரியாகப் பொருந்தவில்லை. அதன் காரணமாகத்தான் அந்த இடத்தில் இருந்து எடுத்து பாடலை அங்குச் சேர்த்தோம்.படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் நேரத்தில்தான் இந்த முடிவை மாற்றி தனியாகப் பாடலை இணைத்தோம்” எனக் கூறியிருக்கிறார்.