கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’, ‘தக் லைஃப்’ படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. அடுத்ததாக, கமல் – ரஜினி இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கமலின் மகள் ஸ்ருதி ஹாசன், சமீபத்திய நேர்காணலில் ஒரு சுவாரஸ்ய விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, ஒரு பிரபல பெங்காலி நடிகையின் மீது அப்பாவுக்கு காதல் ஏற்பட்டது. அதனால் தான் அவர் பெங்காலி மொழியைப் படித்து கற்றுக்கொண்டார். சினிமாவுக்காக அல்ல. அப்போது நடிகை அபர்ணா சென் மீது அவருக்கு காதல். அதனால் தான் ‘ஹே ராம்’ படத்தில் ராணி முகர்ஜியின் கதாபாத்திரத்திற்கு அபர்ணா என்ற பெயர் வைத்தார்” எனத் தெரிவித்தார்.
ஸ்ருதிஹாசன் பேசிய இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.