நடிகர் ஃபஹத் ஃபாசில் சமீபத்தில் அளித்த பேட்டியில், கடந்த ஒரு வருடமாக நான் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தவில்லை. சாதாரண பட்டன்கள் கொண்ட செல்போனை மட்டுமே பயன்படுத்துகிறேன் என்றுள்ளார். எனது தொடர்புகளுக்கான வழி இமெயில் மட்டுமே. சமூக வலைதளங்களில் நான் இல்லை. காரணம் என்னவெனில், எனது தனிப்பட்ட வாழ்க்கையையோ புகைப்படங்களையோ பப்ளிக் ஆக பகிர விருப்பமில்லை.

நடிகராக இருந்தாலும் ஸ்மார்ட்ஃபோன் முக்கியம்தான். ஆனால் .இப்படிதான் இருக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. சற்று வெளிப்படையாகச் சொல்கிறேன், நான் வாட்ஸ்அப்பிலும் இல்லை.
இன்றைய தலைமுறையிடம் இருந்து விலகுகிறேனா என்ற கேள்விக்கு, நான் மோசமான படங்களில் நடிக்காத வரை எந்த விதத்திலும் விலக மாட்டேன் என தெரிவித்துள்ளார்.