பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி.

இவர், கியாரா என்று தனது பெயரை மாற்ற காரணம் என்ன என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அஞ்சனா அஞ்சனா படத்தில் பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திரமான கியாரா என்னை மிகவும் ஈர்த்தது. ஆரம்பத்தில், என் மகளுக்கு அந்த பெயரை வைக்க விருப்பம் இருந்தது . ஆனால் சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில், என் பெயரை மாற்றுவது முக்கியம் என்பதை உணர்ந்தேன்.
எனவே, நான் என் பெயரை கியாரா அத்வானி என்று மாற்றிக்கொண்டேன்” என்றுள்ளார். கியாரா அத்வானியின் உண்மையான பெயர் ஆலியா அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.