நடிகரும் கார் ரேஸருமான அஜித், சமீபத்திய பேட்டியில் உலகம் முழுவதும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காகவே சினிமாவில் சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டேன். அதனாலேயே துபாய்க்கு சென்றேன். அதேபோல் எல்லா இரைச்சல்களிலிருந்தும் விலகிக் கொள்ள விரும்புகிறேன். மேலும், கவன ஈர்ப்பிலிருந்து தப்பிக்கவும் அதுபோல் எனக்கு இது எனக்கு கவனம் செலுத்த உத்வேகம் அளிக்கும். பெரும்பாலான முக்கிய சுற்றுகள், இங்கு நடைப்பெறுவதால் துபாய் வந்துள்ளேன். இது எனக்கு உதவியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


