தமிழில் ‘காற்று வெளியிடை’, ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’, ‘மாறா’, ‘நேர்கொண்ட பார்வை’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது ரவி மோகன் தயாரித்து நடிக்கும் ‘புரோ கோட்’ படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் பட வாய்ப்புகள் தாமதமாக கிடைப்பதற்கான காரணம் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். தரமான கதைகளுக்காக காத்திருக்கிறேன் என்பதே இதற்கு காரணம். எனக்கு கிடைக்கும் எல்லா படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற விருப்பமில்லை. எனது ‘இமேஜ்’-ஐ காப்பாற்ற வேண்டியதால் ஒவ்வொரு கதையையும் நன்கு ஆராய்ந்து தேர்வு செய்கிறேன்.
ரசிகர்கள் என்னை நல்ல நடிகை என்று கூறுகிறார்கள். அந்த நம்பிக்கையை நிலைநிறுத்த வேண்டும் என்பதால் ஒவ்வொரு படியையும் சிந்தித்தே எடுத்து வைக்கிறேன். கதைக்குத் தேவையான முக்கியமான காட்சிகள் இருந்தாலே தவிர, அவசியமில்லாமல் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.