இயக்குனர் மிஷ்கின் சமீபத்திய ஒரு பட நிகழ்ச்சியில் பேசுகையில், ஒரு படம் வெற்றி பெற, இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர் முக்கியம். நானும் சிங்கம் புலியும் நண்பர்கள், நான் ஆராதிக்கிற மனிதர். அவர் இரவு 12 மணிக்குமேல் ட்ரிங்கில் இருக்கும்போது என்னை அழைப்பார். நானும் ட்ரிங்கில் இருப்பேன். எத்தனையாவது ரவுண்டு போயிட்டு இருக்குது என்பேன். அந்த 12 மணிக்கு என்னிடம் ஐ லவ் யூ என்பார். என் படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார். அவர் ஜாலியாக பேசிட்டே இருப்பார். இப்படிப்பட்ட நபர்களை சினிமாவில்தான் பார்க்க முடியும் என்றுள்ளார்.
