Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

நான் படிப்பை முடித்தபிறகு இந்த வேலைதான் செய்தேன்… வருமான வரித்துறை விழாவில் நடிகர் விஜய் சேதுபதி OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மதுரையில், வருமான வரித்துறை சார்பில் வரிசெலுத்துவோர் மைய தொடக்க விழா தமுக்கம் மைதான மாநாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது, நான் படிப்பை முடித்தபிறகு, சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்டிடம் 6 மாதங்கள் வேலை செய்தேன். அதன்பிறகு, பெரிய நிறுவனங்களில் தணிக்கை பணிகளிலும் ஈடுபட்டேன். ஆனால், அரசு தொடர்பான விஷயங்களை புரிந்து கொள்வது எளிதாக இருக்காது. இதனால், வருமான வரித்துறையின் தளத்தினைக் கொண்டு மிக எளிமையாக தகவல்களை அறிய முடிகிறது.

“இந்த இடத்தில், குழந்தைகளுக்கும் புரியும் வகையில் கார்ட்டூன் வடிவில் தகவல்களை விளக்கி இருப்பது பாராட்டுக்குரியது. தற்போது, பான் கார்டு விண்ணப்பிக்க இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே உள்ளது. ஆனால், அது தமிழிலும் இருந்தால் சிறப்பாக இருக்கும். நமது உரிமைக்காக அரசிடம் எந்தளவுக்கு கோரிக்கை வைக்கிறோமோ, அதே அளவுக்கு வரி செலுத்துவதும் அவசியம். இது நமது கடமை என நான் நம்புகிறேன்.

“நான் எப்போதுமே நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு காலத்தில் நாம் நன்றாக சம்பாதித்து, வரி செலுத்தி இருப்போம். ஆனால், ஒரு கட்டத்தில் வரி செலுத்த முடியாத நிலையும் உருவாகலாம். எனவே, நல்ல முறையில் வரி செலுத்தும் குடிமகன்களுக்கு, அரசால் ஏதாவது சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என நான் கோரிக்கை வைக்கிறேன். இந்நிகழ்ச்சியை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியமைக்கு மிகுந்த மகிழ்ச்சி என நடிகர் விஜய் சேதுபதி விழாவில் உரையாற்றினார்.

- Advertisement -

Read more

Local News