மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛தக் லைப்’. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஜுன் 5ல் படம் ரிலீஸாக உள்ளது.

தக் லைப் பட பிரமோஷன் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் கமல்ஹாசன். இந்நிலையில் தற்போது இந்தியா – பாகிஸ்தான் மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா தள்ளி வைக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
அதில், நமது இராணுவ வீரர்கள் எல்லையில் போராடிக்கொண்டிருக்கும்போது இது கொண்டாட்டத்துக்கான நேரம் இல்லை. விழா எப்போது நடக்கும் என்பது தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.