ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த ‘சிக்கந்தர்’ திரைப்படம், இந்த மாதம் 28ம் தேதி ஹிந்தியில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள், இது விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய ‘சர்க்கார்’ படத்தின் ரீமேக் என்று கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். ஆனால் சமீபத்திய பேட்டியில் ஏஆர் முருகதாஸ்,
”இது எந்தவொரு படத்தின் ரீமேக் அல்ல. இது ஒரு முழுமையான புதிய கதை.” என்று விளக்கம் அளித்துள்ளார்.
சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘அனிமல், ச்சாவா’ படங்களுக்குப் பிறகு, இவரது இந்தப் படம் வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிப்பதற்காக ராஷ்மிகா 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என்பது தகவல். 2016ல் முருகதாஸ் இயக்கிய ‘அகிரா’ திரைப்படம் பெரிய தோல்வியை சந்தித்தது. அதனால் 9 வருட இடைவெளிக்குப் பிறகு, அவரது ‘சிக்கந்தர்’ படம் ஒரு பெரிய வெற்றியைப் பெறுமா என்பது குறித்த பாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.