“ஜெயம்மு நிச்சயமு ரா” என்பது ஜகபதி பாபு தொகுத்து வழங்கும் ஜீ5 நிகழ்ச்சி. இதில் நடிகை ஸ்ரீலீலா விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியின் முதல் எபிசோட் தற்போது வைரலாகியுள்ளது.

ஜகபதி பாபு, ஸ்ரீலீலாவிடம் சினிமாவில் உங்களுக்கு பிடித்த டான்சர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவர், “இப்போது சாய் பல்லவி, முன்பு ராதா” என்று பதிலளித்தார். இந்த பதில் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.
ஸ்ரீலீலா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் ‘மாஸ் ஜாதரா’. இதில் ரவி தேஜா கதாநாயகனாக நடித்துள்ளார். படம் வெளியீடு நாளை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தள்ளிப்போனது. மேலும், அவர் பவன் கல்யாண் உடன் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திலும், தமிழில் பராசக்தியிலும், பாலிவுட்டில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்