பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில், என் தந்தை இப்போதும் பரோட்டா சாப்பிடுகிறார். புல் மீல்ஸ் சாப்பிடுவதுடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை பதார்த்தங்களையும் சாப்பிடுகிறார். அவரது மெட்டபாலிசம் வேறு. அவர் வேறு மாதிரியான ஒழுக்கத்தை கடைபிடிக்கிறார். ஆனால் நானோ ஒரு ஸ்பூன் அளவு சாதம், காய்கறிகள், கொஞ்சம் புரோட்டின் சத்து கொண்ட சிக்கன், மட்டன் அல்லது மீன் இவை தான் சாப்பிடுகிறேன். என்னைப் பொறுத்தவரை எதிலும் அளவாக இருப்பது ஆரோக்கியத்தையும் உடல் கட்டுக்கோப்பையும் பராமரிப்பதில் முக்கியத்துவம் வகிக்கிறது என்று கூறியுள்ளார்.
