பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகில் பிஸியாக இருக்கும் ஜான்வி கபூர், சித்தார்த் மல்கோத்ராவுடன் நடித்த பரம சுந்தரி படம் கடந்த ஆகஸ்ட் 29 அன்று வெளியானது. இப்படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ.7.37 கோடியும், உலகளவில் ரூ.10 கோடியும் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், ஜான்வி கபூர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “திருமணமான பிறகு எனக்கு மூன்று குழந்தைகள் வேண்டும். ஏனெனில் 3 எனது அதிர்ஷ்ட எண். இரண்டு குழந்தைகள் சண்டை போட்டால், மூன்றாவது குழந்தை சமாதானப்படுத்தும். இதனால் ஒவ்வொரு குழந்தைக்கும் துணை கிடைக்கும் என்றார்.
ஜான்வி கபூர் ஏற்கனவே தனது கணவரும் மூன்று குழந்தைகளும் உடன் திருப்பதியில் குடியேற வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.