நடிகை ஜோதிகா தனது உடல் எடையை குறைத்த அனுபவத்தைப் பற்றி பேசும் போது, “மூன்று மாதங்களில் ஒன்பது கிலோ எடையைக் குறைத்ததற்கும், என் உள்ளத்தை மறுபடியும் கண்டுபிடிக்க உதவியதற்கும் அமுராவிற்கு நன்றி! என்னை சரியான பாதையில் வழிநடத்தியது நடிகை வித்யா பாலனே” எனக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து மேலும் விளக்கமாக அவர் கூறுகையில், “2024 அக்டோபரில் நடிகை வித்யா பாலன், ஜிம்முக்கு செல்லாமல் எடையைக் குறைக்கும் முறைகளைப் பற்றி பேசினார். அதோடு, அவர் கடைபிடித்த பயணத்தின் வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

வித்யா பாலனின் பயணம் எனக்கு மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது. எடை மேலாண்மை என்பது எனக்கு எப்போதுமே ஒரு சவாலாகவே இருந்து வந்தது. கடுமையான உடற்பயிற்சி அல்லது டிரெட்மில்லில் நீண்ட நேரம் ஓடுவது மட்டுமல்ல, குடல் ஆரோக்கியம், செரிமானம், சீரான உணவு பழக்கம் மற்றும் முறையான ஓய்வும் அவசியமாகிறது. இவை அனைத்தும் உடல் எடையை மட்டுமன்றி மனநிலையையும் முழுமையாக மாற்றக்கூடியவை.
தற்போது, பல ஆண்டுகளாக நான் உணராமல் இருந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் மீண்டும் அடைந்துள்ளேன். எடை குறைக்கும் பயணம் என்பது நம் எதிர்கால ஆரோக்கியத்தின் சாவிதான். குறிப்பாக பெண்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒன்று. நம் மனஅழுத்தத்தை குறைத்து, உள்ளத்தை சீரமைப்பதே இதில் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.