நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல படங்களில் நடித்தவர். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் டிரெயின் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார். அதில், முதலில் டிரெயின் படத்தில் ஒரு பாடல் பாடுவதற்காக என்னை மிஷ்கின் அழைத்திருந்தார். அங்கு சென்றபோது, ‘ஒரு கெஸ்ட் ரோல் இருக்கிறது, நீங்க நடிக்க விரும்புகிறீர்களா?’ என்று கேட்டார். அவருடைய இயக்கத்தில் நடித்தது எனக்கு தனித்துவமான ஒரு அனுபவமாக இருந்தது.
மிகவும் தனித்துவமான ஒருவர். ஆங்கிலம், ஜப்பானிய மொழி படங்கள் குறித்து அவர் பல விஷயங்களைப் பேசுவார். எப்போதும் என்னை அன்பாக ‘பாப்பா’ என்று அழைப்பார்” என ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.