நடிகர் சோனு சூட் சமீபத்தில் அளித்த பேட்டியில், இது வெறும் பஹல்காம் மீது மட்டும் தொகுக்கப்பட்டுள்ள தாக்குதல் அல்ல.. ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கை மீதும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்.. அந்த சம்பவத்தில் தங்கள் கண்முன்னே தந்தையை இழந்த ஒவ்வொரு குழந்தையையும், தங்களது கணவனை இழந்த ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கும்போது ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் தீராத வடுவை ஏற்படுத்தி உள்ளது. இப்போது நாம் எடுத்துக் கொண்டுள்ள இந்த நேரம் கூட, இந்தியா இதற்கு எப்படி தக்க வகையில் பதில் கொடுக்கும் விதமாக எதிர்வினையாற்ற போகிறது என்பதற்காக தான் என்பதை ஒவ்வொருவரும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
