Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

இதெல்லாம் டாக்ஸிக் காதல்… தயவுசெய்து கவனமாக இருங்கள்… ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த நடிகை அனுபமா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பத்து வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் திரைப்பட உலகிற்குள் வந்த மூன்று கதாநாயகிகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன்.மலையாளத் திரையுலகிற்கு பிறகு தமிழ் திரையுலகிலும், அதன் பிறகு தெலுங்கு திரையுலகிலும் இடம் பிடித்தார். இப்போது பிஸியான நடிகையாக இருப்பார். ‘பிரேமம்’ படத்தில் காதல் கதாபாத்திரத்தில் நடித்த அனுபமா, சமீபத்தில் காதல் குறித்து அதிர்ச்சி அளிக்கும் விதமான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

அவரிடம் காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, புரிதல் இல்லதா ஐ லவ் யூ பார் எவர்’ என்பது உலகத்திலேயே மிகப்பெரிய பொய். இது எங்கும் நடக்காத ஒன்று” என்று கூறினார்.

மேலும், “நீதான் என் உயிர், நீ இல்லாமல் நான் இல்லை” போன்ற டாக்ஸிக் காதல்களில் சிக்கி இருப்பவர்கள், தயவுசெய்து அந்த காதலிலிருந்து உடனே வெளியேறுங்கள். இதுதான் எனது சிம்பிளான அறிவுரை” என்று கூறியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.

- Advertisement -

Read more

Local News