சரத்குமாரின் மகளான வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இவர்களது திருமணம் தாய்லாந்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. சூழல் இப்படி இருக்க பல வருடங்களுக்கு முன்பு வரலட்சுமி நடித்திருந்த மதகஜராஜா திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி சக்கை போடு போட்டுவருகிறது. இந்நிலையில் வரலட்சுமி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
விக்னேஷ் சிவனின் போடா போடி, முருகதாஸின் சர்கார் என பல சூப்பரான படங்களில் நடித்திருந்தாலும் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலா வரலட்சுமியை தன்னுடைய தாரை தப்பட்டை படத்தில் நடிக்க வைத்தார். அந்தப் படத்தில் மிகப்பெரிய பெயரை பெற்றார் வரலட்சுமி. கரகாட்ட நடனம், தைரியமாக பேச்சு என படம் முழுக்க அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார்.
இந்நிலையில் மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட வரலட்சுமி பேசுகையில், “எந்தப் படத்தில்தான் கிளாமர் இல்லை. எல்லா படங்களிலும் ஹீரோயின்கள் இருக்கிறார்கள். சில படங்களில் அவர்களுக்கு நல்ல ரோல் இருக்கும். படங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடுவார்கள்.கிளாமருக்காகத்தானே அந்தப் பாடலில் ஆடுவார்கள். அவர்கள் என்ன புர்ஹா அணிந்துகொண்டா ஆடுகிறார்கள். எந்த ஹீரோயினையும் கட்டாயப்படுத்தி கிளாமர் காட்ட சொல்வதில்லை. அவர்களுக்கே அது ஓகேயாக இருந்தால்தான் கிளாமர் காண்பிக்கிறார்கள் என்றுள்ளார்.