முன்னணி இசையமைப்பாளரான சாம் சி.எஸ். தற்போது பல திரைப்படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். அவர் பின்னணி இசை அமைப்பில் மிகவும் பிரபலமானவராக பார்க்கப்படுகிறார்.

இவர் அளித்த சமீபத்திய பேட்டியில் என்னுடைய இசையில் உருவான பல ஹிட் பாடல்களை அனிருத் தான் பாடியுள்ளார். அந்த பாடல்களுக்கு இசை அமைத்தது நான் என தெரியாமல், ரசிகர்கள் அதனை அனிருத் இசையமைத்ததாக எண்ணிவிடுகின்றனர். அனிருத்துக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால் அந்த பாடல்கள் விரைவாக எல்லோரையும் சென்றடைகின்றன. இதனால் ரசிகர்கள் இசையமைப்பாளர் யாரென்பதை கவனிக்காமல் தவறாக நினைக்க நேரிடுகிறது. ஆனால் தற்போது அந்த நிலை மாற்றமடைந்துள்ளது” என நினைக்கிறேன்.
மேலும், “எனது பல பாடல்களை சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த பாடல்கள் என் இசையில் உருவானவை என்பது அவர்கள் பலருக்கும் தெரியாது. இப்போது பலருக்கும் அது புரிந்து வருகிறது. தற்போது எந்த ஒரு பாடலாக இருந்தாலும், அதனை யார் இசையமைத்தார், யார் பாடினார் என்பதைக் கவனிக்க மக்கள் ஆரம்பித்து விட்டார்கள் என்பதனால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரிவித்தார்.