இந்திய சினிமாவில் முன்னணியில் நடிகையாக வலம்வரும் நடிகை தமன்னாவுக்கு, அவர் எங்கு சென்றாலும் அவரது ரசிகர்கள் பெருமளவில் அவரை பின்தொடர்ந்து வருவது வாடிக்கை.

அதிலும் குறிப்பாக புகைப்படக் கலைஞர்கள் தமன்னாவை தொடர்ந்து பின்தொடர்ந்து சென்று அவரைப் புகைப்படம் எடுத்து கொண்டே இருப்பார்கள். இந்நிலையில், மும்பையில் தமன்னா தனது இல்லத்தில் இருந்து வெளியேறியபோது சிலர் அவரைப் பின்தொடர்ந்து புகைப்படம் எடுத்தனர்.
அப்போது தமன்னா ஒரு சலூன் கடைக்குள் சென்றார். அங்கும் சில புகைப்படக் கலைஞர்கள் நுழைய முயன்றபோது, அதனால் கோபமடைந்த தமன்னா, “சலூனுக்கு எதற்காக வருகிறீங்கப்பா… ஏன் இப்படி செய்றீங்க…” என்று ஆதங்கமாகக் கூறினார். இதையடுத்து அங்கு இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களைக் கடையிலிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் தமன்னா மிகவும் மனவேதனையில் ஆழ்ந்ததாக கூறப்படுகிறது.