பிரபல நடிகை தீபிகா படுகோனும் தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பாடி ஷேமிங்கை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். “திரையுலகில் முதன்முதலாக அறிமுகமாகியபோது, பலர் என் நிறம் குறித்து விமர்சித்தனர்.

மேலும், நான் எடுத்த புகைப்படங்களை சில இயக்குனர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு அனுப்பியபோது, அவர்கள் எனை ஆண்களைப் போலவே தோற்றமளிக்கிறாய் எனக் கூறினர். அப்போது இப்படிப்பட்ட கருத்துகளை தாங்க இயலவில்லை,” என அவரது கசப்பான அனுபவங்களை கூறியுள்ளார்.
தற்போது தீபிகா, அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.