மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’, விஜய்யின் ‘மாஸ்டர்’, அஜித்தின் ‘விடாமுயற்சி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான ரம்யா சுப்பிரமணியன். இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் கொண்டுள்ள இவர், தொடர்ந்து தன்னைப் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், சிலர் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவரது உருவத்தை மாற்றி, அவதூறான முறையில் ஆபாசமான காணொளி ஒன்றை உருவாக்கி, அவரது குரலையும் மாற்றி வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ அவரது கவனத்திற்கு வந்ததும், ரம்யா சுப்பிரமணியன் இதுபற்றி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு கடுமையான பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், “ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்னை தவறாக சித்தரித்தது இது மூன்றாவது முறை. இது என் தனிப்பட்ட உரிமையை மீறும் செயல் மட்டுமல்ல, சட்டவிரோதமானதாக உள்ளது. இது போன்ற செயல் மீண்டும் நடந்தால், சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என எச்சரிக்கை கூறியுள்ளார்.