“லப்பர் பந்து” திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக விளங்கும் சுவாசிகா, சூர்யா நடித்த “ரெட்ரோ” படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்துவரும் சுவாசிகா, சிறந்த துணை நடிகைக்கான விருதினைப் பெற்றுள்ளார். விருதைப் பெறும் போது அவர் கூறியதாவது:

“லப்பர் பந்து படத்தின் மூலம் எனக்கு மிகவும் அன்பும் பாராட்டும் கிடைத்தது. இந்த சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகர் ஜெயராம் கையினால் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. எனது கனவுகளை நிறைவேற்ற உதவி செய்யும் என் கணவருக்கு எனது மனமார்ந்த நன்றி. படத்தில் நான் கெத்து பொண்டாட்டி. இங்கே நான் பிரேம் பொண்டாட்டி” என்று கூறினார்.
பிறகு, சுவாசிகாவிடம் ஒருவர் “ஒரு ஆண் எவ்வாறு கெத்தாக இருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியபோது, பதில் அளிக்கும் போது சுவாசிகா கூறினார், “கெத்தான ஆண் என்பது, தன் மனைவி மற்றும் மகளின் கனவுகளை நிறைவேற்றும் ஆணே. அவன் தான் எனக்கு ‘கெத்தானவர்’. என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.