தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் “தடையற தாக்க”, “என்னமோ ஏதோ”, “ஸ்பைடர்”, “தீரன் அதிகாரம் ஒன்று”, “இந்தியன் 2”, “அயலான்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் ஆர். மாதவனுடன் இணைந்து ‘தே தே பியார் தே 2’ எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஹிந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் சில கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து நடிகை ராகுல் பிரீத் சிங் கூறும்போது, திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி காட்டக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. ஒரு நடிகையின் திறமையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என கூறியுள்ளார்.