Touring Talkies
100% Cinema

Tuesday, October 7, 2025

Touring Talkies

“நான் படிக்கும்போதும் பாலியல் தொல்லைகள் இருந்தன” – நடிகை கெளரி கிஷன் சொல்கிறார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் வணிகவியல் துறையின் ஆசிரியரான ராஜகோபாலன் என்பவர் தங்களுக்குப் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாகப் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

ஆசிரியரின் இந்த செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ’96’ படத்தில் சின்ன வயது த்ரிஷாவாக நடித்திருந்த நடிகை கௌரி கிஷன் தானும் பள்ளியில் படித்தபோது இது போன்ற பாலியல் அத்துமீறல்களைச் சந்தித்ததாக கூறியுள்ளார்.

இது குறித்து இன்ஸ்டாகிராமில் நேற்றைக்கு அவர் எழுதியிருக்கிறார். அதில் தான் படித்த அடையார் ஹிந்து பள்ளியில் தனக்கும் இது போன்ற நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அதில்… “நான் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ, மாணவிகளை அசிங்கமாகப் பேசுவது, சாதியை வைத்துப் பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பைக் கிண்டல் செய்வது, நம் குணாதிசயத்தைக் கேவலப்படுத்துவது, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை மாணவ, மாணவியர் மீது சுமத்துவது போன்ற கொடுமைகளை நான் மட்டுமல்லாது என்னுடன் படித்த அனைவரும் எதிர்கொண்டனர்.

எனவே, அப்பள்ளியில் தற்போது படிக்கும் மாணவிகள் இது போன்ற பிரச்சனைகளை நீங்கள் இன்னமும் அனுபவித்தால் தயங்காமல் தெரிவியுங்கள். உங்களின் பெயர்களை வெளியே சொல்லாமல் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறேன்” என்று கூறியுள்ளார் கெளரி கிஷன்.

- Advertisement -

Read more

Local News