Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்த நடிகை ஷ்ரத்தா கபூர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹாலிவுட்டில் அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் ‘ஜூடோபியா 2’. இந்த படத்தில் போலீஸ் கேரக்டராக வரும் ஜூடி ஹாப்ஸி க்கு பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஹிந்தியில் டப்பிங் பேசி உள்ளார். வருகிற 28ம் தேதி படம் வெளிவருகிறது. ஆங்கிலத்துடன், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது.புகழ்பெற்ற ஜூடி ஹாப்ஸ் கேரக்டருக்கு டப்பிங் பேசியிருப்பது குறித்து ஷ்ரத்தா கபூர் கூறும்போது ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்திற்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவள் தன் நிலையில் உறுதியாக இருந்ததை நிச்சயமாக என்னால் புரிந்து கொள்ள முடியும். அவள் அதிகாரம் மிக்கவள், தேவைப்படும் தருணத்தில் மென்மையாகவும் இருப்பாள். ஜூடியாக இருந்தது மகிழ்ச்சி.அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தது மிகவும் வித்தியாசமான அனுபவம். வேடிக்கையாகவும் கூலாகவும் இருக்கும் கதாபாத்திரத்திற்கு நான் குரல் கொடுத்தது சுவாரஸ்யமாக இருந்தது.

- Advertisement -

Read more

Local News