தமிழ் திரைப்பட உலகில் “நெருங்கி வா முத்தமிடாதே” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சஞ்சனா நடராஜன், அதன் பின்னர் “இறுதிச்சுற்று,” “நோட்டா,” “கேம் ஓவர்,” “ஜகமே தந்திரம்,” “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” போன்ற படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறார். தற்போது, பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரான தினகரன் சிவலிங்கம் இயக்கிய “பாட்டல் ராதா” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில், குரு சோமசுந்தரம் நடித்த கதாபாத்திரத்துக்கு மனைவியாக அஞ்சலம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், ஒரு யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில், “நான் சமூக வலைதளங்களில் பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தால், அதில் எந்த தவறும் இல்லை. எனக்குத் தோன்றுவதை செய்வதற்குத்தான் உரிமை உள்ளது,” என்று கூறினார்.
அதைப் பகிரும் முன், அதற்கு எப்படி எதிர்வினைகள் வரும், அது சரியா? என்று எல்லாம் யோசித்து தான் பதிவிடுவதாகவும், “எனக்குச் சரியென்று தோன்றினால் எந்த விஷயத்தையும் செய்வேன். அது ஒரு காஸ்மெட்டிக் சர்ஜரியாக இருந்தாலும் சரி. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்து கவலைப்பட மாட்டேன்,” என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.