சென்னையில் நேற்று நடைபெற்ற ‘தி வெர்டிக்ட்’ திரைப்பட விழாவில், தனது கையில் சிறிய பிளாஸ்டர் கட்டிய நிலையில் வரலட்சுமி பங்கேற்றிருந்தார். இதைப் பார்த்த சிலர், “என்ன ஆனது? பாடி பில்டரான கணவருடன் சண்டையா?” எனக் நகைச்சுவையா கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வரலட்சுமி, “ஒரு சண்டை காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தில் தான் இது நடந்தது. எனக்குத் தவறில்லை, எதிர் நடிகர் தவறுதலால் அடிபட்டேன். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நிறைய பிசியாக நடித்து வருகிறேன்.
படப்பிடிப்புகள் காரணமாக ஐதராபாதில் அதிக நாட்கள் இருக்கிறேன். வேலை இல்லாத நேரங்களில் மும்பைச் சென்று கணவரின் வீட்டில் தங்குகிறேன். தமிழ் படங்கள் அல்லது குடும்ப நிகழ்வுகள் இருந்தால் சென்னைக்கு வருகிறேன். தற்போது விஜய் சேதுபதியின் மகன் நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தில் ‘சண்டக்கோழி 2’ படத்தை வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் எந்த சண்டையுமே இல்லை. தற்போது சந்தோஷமாக இருக்கிறேன்” என்று கூறினார்.