மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால், தனது 360-வது படமான ‘துடரும்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு வெளியான ‘ஆவேசம்’, ‘ஆடுஜீவிதம்’, ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ போன்ற மலையாள படங்கள் இந்தியா முழுவதும் ரசிகர்களை கவர்ந்தன. இதை குறித்துப் பேசும்போது, மோகன்லால் தனது கருத்தை பகிர்ந்தார்.
அவர் கூறுகையில், “தென்னிந்திய படங்களுக்கும் வடஇந்திய படங்களுக்கும் தற்போது எந்த வித்தியாசமும் இல்லை. எல்லா படங்களும் ஒரே வகைதான். இது ஒரு அழகான மாற்றம். அனைவரும் இதை ரசிக்க முடியும். நாங்கள் இந்தி, தெலுங்கு படங்களையும் பார்கிறோம். மக்கள் அனைவரும் எல்லா மொழிகளிலும் உருவாகும் படங்களை பார்ப்பது மிக முக்கியம். இன்று இதே போல அனைத்து மொழி படங்களும் மக்களிடையே விரும்பப்பட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.