Wednesday, January 22, 2025

எந்தவிதமான பெரிய பட்ஜெட்டும் இல்லை…மலையாள சினிமாவை வியந்து பாராட்டிய‌ நடிகர் மாதவன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் மாதவன், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். அதன்படி, சமீபத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படத்தில் மாதவன் நடித்திருந்தார்.

இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பாலிவுட்டில், அனன்யா பாண்டே, அக்சய் குமார் நடிக்கும் படத்திலும் மாதவன் நடித்து வருகிறார். இப்படம் வரும் மார்ச் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், மலையாள சினிமாவை நடிகர் மாதவன் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், மலையாள சினிமா எந்தவிதமான பெரிய பட்ஜெட்டும் இல்லாமல், நல்ல கதை, வலுவான நடிப்பு மற்றும் நன்கு எழுதப்பட்ட கதாபாத்திரங்களை ரசிகர்களிடம் கொண்டு செல்வதில் கவனம் செலுத்துகிறது’ என்று வியந்து பாராட்டியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News