‘பைசன்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் மாரி செல்வராஜிடம், அரசியலுக்கு நீங்கள் வர வாய்ப்பு உள்ளதா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குனர் மாரி செல்வராஜ், என் வாழ்க்கையில் கலைதான் எனக்கு பெரிய போதை.

பதற்றத்திலேயே இருப்பதால் மிக விரைவாக வேலை பார்க்கக்கூடிய ஆள் நான். நிறைய படங்களை எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இன்னும், 15 கதைகளையாவது திரைப்படமாக உருவாக்க விருப்பம் இருக்கிறது. இயக்குநர் பா. ரஞ்சித் அரசியலுக்கு வருவார். அதற்கான முழு தகுதி உடையவர்.
அவர் எதற்கும் பயப்பட மாட்டார்; களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார் கண்டிப்பாகக் களத்தில் இறங்குவார் எனக் கூறியுள்ளார்.