பாடகி ஜொனிடா காந்தி, தான் அணியும் கிளாமர் ஆடைகள் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்திருக்கிறார். அதில்,பாடகி என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஒரு பெண் எப்படிச் சிந்திக்கிறாளோ, அவ்வாறே இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம் எனக் கூறுகிறார்.

சில நேரங்களில் மேடையில் ஒளியிழைகள் இணைக்கப்பட்ட ஆடைகளில், சில சமயங்களில் நிகழ்ச்சிகளில் புடவையுடன், பயிற்சிக்குள் தளர்வான உடைகளில், இன்னும் சில சமயங்களில் கேமிராவிற்கு முன் நூலிழையான ஆடைகளில் காணப்படுவேன்.
ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்பதற்காக அவளிடம் திறமை இல்லை என்று கூற முடியாது. சமூகத்தின் கண்களில் பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் உடை அணிந்திருந்தாலும், அதனால் ஒரு பெண்ணின் வலிமை மறைவதில்லை. உங்கள் பார்வைக்கு இது பொருந்தவில்லை என்றால், தயங்காமல் இங்கு கருத்து சொல்லி நகரலாம்… என ஜொனிடா பதிலளித்துள்ளார்.