தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி சாதனையை கொண்டாட கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த ரெட்டி கலந்துகொண்டார். இதே போல், திரை பிரபலங்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர். குறிப்பாக சிவகார்த்திகேயன், சிவக்குமார், வெற்றிமாறன், மிஷ்கின், தியாகராஜா குமாரராஜா, பிரேம் குமார், தமிழரசன் பச்சமுத்து போன்ற பல திரைப்பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேசுகையில், காலை உணவு திட்டம் குறித்து நான் படிக்கும் காலத்திலேயே யோசித்துள்ளேன். இது மிகவும் சிறப்பன திட்டம். “சச்சின் படித்தாரா? இளையராஜா படித்தாரா? ரகுமான் படித்தாரா? என்று பலர் கேட்பார்கள். அதை நம்பாதீர்கள். விதிவிலக்கு எப்போதும் உதாரணமாக இருக்காது. படிக்காமல் வெற்றி பெற்றவர்களை விட படித்து வெற்றி பெற்றவர்கள் தான் அதிகமாக உள்ளோம். படிங்க… படிங்க… கண்டிப்பாக படிங்க…என்றுள்ளார்.