அரண்மனை திரைப்படத்தின் முதல் பாகம் 2014ஆம் ஆண்டில் வெளியானது. இதில் சுந்தர், ஹன்சிகா மோத்வானி, வினய் ராய் மற்றும் ஆண்ட்ரியா ஜெர்மியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.முதல் பாகம் வெற்றியடைந்ததையடுத்து இரண்டாம் பாகம் 2016ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதில் சுந்தர், ஹன்சிகா, சித்தார்த் மற்றும் த்ரிஷா நடித்தனர். 2021ஆம் ஆண்டில் வெளிவந்த அரண்மனை மூன்றாவது பாகத்தில் சுந்தர், ஆர்யா, ராஷி மற்றும் ஆண்ட்ரியா நடித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியானது. படம் பெரிய வெற்றியைப் பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, 2024ஆம் ஆண்டுக்கான தமிழ் திரைத்துறையின் வெற்றிக் கணக்கை திறந்தது.
இந்நிலையில், அரண்மனை 5 படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை சுந்தர் சி இயக்குகின்றார், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பார். படப்பிடிப்பு நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதுடன், படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.