முன்னணி நடிகையான பிரியாமணி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். ‘பருத்திவீரன்’ படத்தில் சிறந்த நடிப்புக்காக தேசிய மற்றும் மாநில விருதுகளை பெற்ற அவர், தற்போது பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பான் இந்தியா படங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். “இந்த ‘பான் இந்தியா’ என்ற சொல்லை இனிமேல் பயன்படுத்தவே கூடாது. நாம் அனைவரும் இந்தியர்கள் தான். அப்படி இருக்கும்போது ஏன் அந்த வார்த்தை? இந்தி நடிகர்கள் தென்னிந்திய படங்களில் நடித்தால் அவர்களை தென்னிந்திய நடிகர்கள் என்று சொல்லவில்லையே அதேபோல், ரஜினி, கமல், தனுஷ் போன்றவர்கள் பல மொழிகளில் நடித்துள்ளனர்.
அவர்களை யாரும் பான் இந்தியா நடிகர்கள் என்று சொல்லவில்லை. மொழி முக்கியமல்ல; கதை மற்றும் நடிப்பு தான் முக்கியம். ஆகையால் ‘பான் இந்தியா’ என்ற வார்த்தையை இனி தவிருங்கள் என்று பிரியாமணி கூறியுள்ளார்.

